குறுந்தொகை - பாடல் 02

It's a Sangam poem where a man asks a bee if it has ever found a sweeter fragrance than his beloved’s hair. He urges the bee to be honest, not flattering, and admires the maiden’s beauty, her graceful movements, and lovely teeth. The verse captures the first meeting of lovers.

குறுந்தொகை - பாடல் 02

சங்க இலக்கியத்தின் அழகான பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல், தலைவன் ஒரு வண்டைப் பார்த்து தன் காதலியின் கூந்தலின் மணத்தைப் பற்றிக் கேட்கும் அழகான காட்சியைச் சித்தரிக்கிறது.

கொங்கு தேர் வாழ்க்கை

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

குறுந்தொகை - 02 பாடியவர் - இறையனார்

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக

கருத்து: தலைவன் தலைவியை இயல்பாகச் சந்தித்துக் காதல் கொண்ட பின்னர் (இயற்கைப் புணர்ச்சி), மீண்டும் அவளைச் சந்திக்கும்போது அவள் வெட்கத்தால் தயங்குவதைக் காண்கிறான். அவளது நாணத்தைப் போக்க, மென்மையாக அவளைத் தொட்டு உரையாடுகிறான். அதேநேரத்தில் அவளது அழகை மறைமுகமாகப் புகழ்ந்து பாடுகிறான்.

தலைவியின் வெட்கம் நீங்காததைக் கண்ட தலைவன், நேரடியாக அவளிடம் பேசாமல், அருகில் உள்ள வண்டைப் பார்த்துப் பேசும் தந்திரத்தை மேற்கொள்கிறான்.

"மலர்களின் மணத்தைத் தேடி அலைந்து, அவற்றின் தேனை உண்டு வாழும் வண்டே! உன் சிறகுகள் எவ்வளவு அழகானவை!

என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லாதே. உனக்குத் தெரிந்த உண்மையை மட்டுமே கூறு.

பல பிறவிகளாகப் பழகி வரும் நட்பினள், மயில் போன்ற நடையுடையவள், அடர்ந்த பற்களையுடைய இந்தப் பெண்ணின் கூந்தலின் மணத்தைப் போன்ற நறுமணம் எந்த மலரிலாவது உண்டா? நீ எத்தனையோ பூக்களைச் சுற்றி அலைந்திருக்கிறாய் - சொல்!"

சொற்களஞ்சியம்

கொங்கு - பூவின் மகரந்தம்
தேர் - தேர்ந்தெடுக்கும்
வாழ்க்கை - வாழும்
அஞ்சிறைத்தும்பி - உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு) → (அம் சிறை - அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது - விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ - நீ கண்டறிந்ததைக் கூறு
பயிலியது - பல பிறவிகளிலும் பழகிய
கெழி - நட்பு ; கெழீஇய (நட்புடைய)
பயலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல் - மயில் போன்ற
செறி எயிற்று அரிவை (செறியியெற் றரிவை) - செறி (அழகிய) + எயிற்று (பற்கள்) + அரிவை (தலைவி / பெண்)
கூந்தலின் - கூந்தலை விட
நறியவும் உளவோ - மணமிகுந்த (நறியவும்) ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே - நீ அறிந்த பூக்களிடம்

English Translation

📖 Translation

The man addresses a bee[1], asking it to tell only the truth rather than words meant to please him. He asks: Among all the flowers you know,
could there be even one with the fragrance
of this maiden's tresses—she who has a deep bond with me,
resembles a peacock, and has close-set, fine teeth?

The lover addresses the bee because the maiden is too shy to receive his direct compliments. In Sangam literature, the bee often serves as a messenger or intermediary between lovers. Here, the man uses the bee to indirectly praise his beloved's beauty and fragrance—particularly the natural musk-like scent of her hair, which is celebrated in Tamil poetry as a symbol of beauty and femininity.

The poem captures the romance of first encounter, where the maiden's modesty prevents her from responding directly to the man's admiration. The lover's clever use of the bee as a witness to nature's beauty becomes a poetic way to express his overwhelming affection, comparing the maiden's essence to the sweetest fragrances found in nature itself.

திருவிளையாடற் புராண இணைப்பு

திருவிளையாடற் புராணத்திலும் (தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்) இந்தப் பாடல் மேற்கோள் காட்டப்படுகிறது. செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம் கொடுத்தனுப்பிய பாடல்.

நக்கீரர் - சிவபெருமான் வாதம்

பாண்டியன் அவையில்[2] 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் செய்யுளின் பொருள் குறித்துச் சங்கப் புலவராக வந்த சிவபெருமானுக்கும், நக்கீரர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்தது.

அப்போது சிவபெருமான் கூறியதாக வரும் வெண்பா:

"

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியை
ஆராய்ந்து சொல்ல தக்கவன்

— சிவபெருமான்

இதற்கு நக்கீரர் பின்வரும் செய்யுளால் விடையிறுத்தார்:

"

சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை

— நக்கீரர்

வலையொளி இணைப்பு

📝 Footnotes
  1. Nandini Karky's – Kurunthogai 2 – A drop of delicious honey

  2. எழுத்து - தருமிக்குத் தண்ணருள் --திருவிளையாடல் --- மலரும் தமிழ்

🔍 Explore Further
  1. நக்கீரர் பரதர்
  2. விக்கிமூலம் திருவிளையாடற் புராணம்/52
  3. தென்றல் பேராசிரியர் நினைவுகள்: நயமெனப் படுவது யாதெனின்
  4. வேர்களைத்தேடி பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா? - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 02
  5. மன வெளிப் பயணம் குறுந்தொகை- கொங்குதேர் வாழ்க்கை

Disclaimer

The views expressed are personal and for informational purposes only.

Support This Content

If you found this content helpful, consider supporting the author.